News March 15, 2025
தொடர் கதையாகும் மான் உயிரிழப்பு!

கீரனூர் அடுத்த பொன்மாரி கல்லூரி அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புள்ளிமான் அடிபட்டு இறந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி வெளியே வரும்போது, வாகனங்கள் மோதி அடிபட்டு இறப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
புதுக்கோட்டையில் மே.1 மதுபான கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடை மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (மே.1) “உழைப்பாளர் தினத்தை ” முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனவும் அன்று சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News April 29, 2025
சமையல் உதவியாளர் பணி இடங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க வரும் 6.5.2025 மாலை 5:45 மணி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News April 29, 2025
குடிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு அழைக்க வேண்டிய எண்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், RWS பிரிவு, புதுக்கோட்டை – 04322-221521 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்