News January 29, 2025

தொகுப்பூதிய வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒரு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகிற்கு (SJPU) ஒரு பெண் சமூகப் பணியாளர் உட்பட இரண்டு சமூகப் பணியாளர்கள் ஆகிய பணியிடத்திற்கு தொகுப்பூதியத்தில் முழுவதுமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு 04575 240166 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 22, 2025

திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

image

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

News April 21, 2025

குறைதீர் கூட்டத்தில் 514 மனுக்கள் பெறப்பட்டன

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 514 மனுக்கள் பெறப்பட்டன.

News April 21, 2025

சிவகங்கையில் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் 

image

சிவகங்கை மாவட்ட வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 25.04.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!