News August 27, 2024
தேவையூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற திருத்தேர் திருவிழா

பெரம்பலூர் அருகே தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மகாமாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆக 9ஆம் தேதி பூச்சொரிதலோடு தேர்திருவிழா தொடங்கி, கடந்த 15ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ஊர்வலம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஊர்வலம் ஊர் பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.
Similar News
News October 19, 2025
பெரம்பலூரில் இப்படியான இடங்களா!

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.
News October 19, 2025
பெரம்பலூர்: மழை பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநில உதவி – 1070, மாவட்ட உதவி – 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் கட்டயாம் உதவும். இதனை Save பண்ணிக்கோங்க.
News October 19, 2025
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயலில் வேலை செய்யும் விவசாயிகள் இடி, மின்னல், மழை நேரங்களில் வயலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி எச்சரித்துள்ளார்.