News September 14, 2024
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News September 18, 2025
சிவகங்கை: வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

திருப்புவனம் வைகை ஆற்றில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் வைகை ஆற்று மேம்பாலத்தில் இரு புறமும் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சி.சி.டி.வி., திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஸ்டேசனில் இருந்தபடியே வைகை ஆறு மற்றும் பாலத்தில் சென்று வருபவர்களை கண்காணிக்க முடியும்.
News September 18, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News September 17, 2025
சிவகங்கை: அரசு ITI ல் சேர அவகாசம் நீட்டிப்பு..!

சிவகங்கை ஐடிஐயில், காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 30.9.2025 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750/- இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள் காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE IT