News April 9, 2025
தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News April 19, 2025
RR அணிக்கு 181 ரன்கள் இலக்கு

RRக்கு எதிரான நடப்பு IPL போட்டியில் 180 ரன்களை குவித்திருக்கிறது LSG அணி. டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 66 ரன்கள் அடித்து அசத்தினார். ஆயுஷ் பதோனியும் 50 ரன்கள் குவிக்க, LSG அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
News April 19, 2025
வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை குறைத்த 5 வங்கிகள்

ரெப்போ வட்டியுடன் தொடர்புடைய வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டியை 5 வங்கிகள் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. SBI வட்டியை 8.50%ல் இருந்து 8.25%ஆக குறைத்துள்ளது. PNB வட்டி 9.10%ல் இருந்து 8.85%ஆகவும், இந்தியன் வங்கி வட்டி 6.25%-ல் இருந்து 6.00%ஆகவும், பேங்க் ஆப் இந்தியா வட்டி 9.1%ல் இருந்து 8.85%ஆகவும், பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா வட்டி 9.05%ல் இருந்து 8.80%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
News April 19, 2025
நீட் தேர்வு பலி: TN முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு அதிமுக மாணவர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் கண்டன முழக்கம் எழுப்பினர். இதேபோல் TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.