News March 25, 2024
தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
பனியன் துணி வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது

திருப்பூர் காந்திநகரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் ராமசாமி. இவரிடம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி, பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் ராமசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News April 18, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 18, 2025
திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் 0421-2250192.▶️திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் 0421-2200553.▶️அவிநாசி வட்டாட்சியர் 04296-273237.▶️பல்லடம் வட்டாட்சியர் 04255-253113.▶️காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689.▶️உடுமலை வட்டாட்சியர் 04252-223857.▶️மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588.▶️ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.