News March 21, 2024
தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
News April 21, 2025
தென்காசி மாவட்ட ரோந்து பணி விபரம்

தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்களும் பதிவிடப்பட்டுள்ளன.
News April 20, 2025
தென்காசி: ஆப்டிகல் டிக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்டிகல் டிக்னீசியன் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி மே.31. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.