News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

திருப்பூரில் இடம் மாறுகிறது. எது தெரியுமா?

image

திருப்பூர், பார்க் ரோட்டில், மாவட்ட மைய நுாலகம் உள்ளது. 50 ஆண்டு முன் பொது நுாலகத்துறை நிறுவிய திருப்பூரின் முதல் நுாலகம் இது.இந்நிலையில், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் பின், எஸ்.பி. அ லுவலகம் அருகே, கோர்ட் எதிர்புறம் காலியாக உள்ள, 75 சென்ட் இடத்தில், மூன்று தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நுாலகம் கட்ட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒன்பது கோடி ரூபாயில் கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

திருப்பூர் அருகே பயங்கர விபத்து!

image

திருப்பூர்-தாராபுரம் சாலையில் வேங்கிபாளையம் பஸ் நிலையம் அருகே கன்டெய்னர் லாரி ஒன்று சாலையோரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று. அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News November 28, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் மங்களம் நால்ரோடு பகுதியில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்‌. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை சோதனை செய்தபோது, கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சையத் அன்சாரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!