News April 15, 2024

தேர்தல் முடிந்தாலும் விதிமுறைகள் தொடரும்

image

நீலகிரி மாவட்ட மக்களவை தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி வரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும், வாகன சோதனையும் தொடரும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

நீலகிரி:: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

image

நீலகிரி மக்களே…, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA,M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் நாளை(செப்.19) காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நீலகிரி: நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை!

image

கோத்தகிரி: கிளப் சாலை செல்லும் குடியிருப்பு பகுதியில் நேற்று முந்தினம் இரவு சிறுத்தை ஒன்று உலா வந்தது. அப்போது அங்குள்ள வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி வேட்டையாட முயன்றது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் மாடியில் நின்றவாரே சிறுத்தையை துரத்தினார். நாயும் காயங்களுடன் உயிர் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!