News April 14, 2024
தேர்தல் பறக்கும் படையினர் ரூ.80,000 பறிமுதல்

நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 21, 2025
JUST IN தஞ்சை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 21, 2025
தஞ்சை: 7 வீடுகள் இடிந்து சேதம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் அக்.19 காலை 11 மணி முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்தது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக வெட்டிக்காட்டில் 32 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News October 21, 2025
தஞ்சை: மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவா்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்படி கும்பகோணத்தில் நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரசு விடுமுறை காரணமாக ரத்து செய்யப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.