News March 28, 2024
தேர்தல் பணியில் 7500 அரசு ஊழியர்கள்

நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
நாகை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

நாகை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
நாகை: CCTV பழுதுநீக்கும் பயிற்சி அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், வேதாரண்யத்தில் மத்திய அரசு மூலம் 13 நாட்கள் இலவச சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கும் பயிற்சி வருகிற 10ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 மற்றும் 9047710810 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


