News April 16, 2024
தேர்தல் பணியில் 5164 பேர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
திருப்பத்தூர்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

திருப்பத்தூர்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
திருப்பத்தூர்: போலி ATM கார்டு கொடுத்து பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் நேற்று (நவ.16) ரேவதி என்பவர் அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முயன்ற போது, அவருக்கு உதவுவது போல் நடித்து 23 பணத்தை கொள்ளையடித்தும், அதே போல், மேல்கூர்மாபாளையம் பகுதியில் முத்து என்பவரிடம் 17,000 ரூபாய் கொள்ளையடித்துச்சென்ற நபரை, புகாரின் பேரில் உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
News November 17, 2025
திருப்பத்தூர்: கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவருக்கு வெட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியில் அப்புன்ராஜ் என்பவரின், மனைவியுடன் பிரேம்குமார் என்ற இளைஞருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக் கேட்ட அப்புன்ராஜை கடந்த 13ஆம் தேதி வீடு புகுந்து வெட்டிவிட்டு பிரேம்குமார் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், நேற்று (16.11.2025)வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


