News March 19, 2024

தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதி
ஆரணி திமுக கட்சியின் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆரணி தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, ஜெயராணி ரவி, ஆரணி நகர மன்ற தலைவர் துரைமாமது மற்றும் கழக நிர்வாகிகள், பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 9, 2025

தி.மலை: உங்க நிலத்தை காணமா??

image

தி.மலை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து தி.மலை மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்.. SHARE

News December 9, 2025

தி.மலை: கஞ்சா வைத்திருந்த 3 போலி சாமியார்கள் கைது

image

செய்யாறு வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த நிலையில் இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. 3 போலி சாமியார்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 9, 2025

தி.மலை: பெண் போலீசை அறைந்த ஆந்திர மக்கள்!

image

போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் தி.மலை கோயிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அவரை தாக்கினர். இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீத், மாணிக்கராவ் ஆகியோர் மீது தி.மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!