News March 21, 2024
தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி ராம்நாடு தொகுதி வேட்பாளராக மருத்துவர் சந்திரபிரபா அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 21, 2025
திருவாடானை அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி

திருவாடானை அருகே அந்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிமியோன் 55. இவர் அறிவித்தியில் இருந்து அந்திவயலை நோக்கி டூவீலரில் சென்றார். அந்திவயல் அருகே சென்ற போது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது.மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிமியோன் இறந்தார். திருவாடானை போலீசார் அரசு பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்துாரை சேர்ந்த எழிலரசனை 41, கைது செய்தனர்.
News November 21, 2025
ராமநாதபுரம்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 21, 2025
ராமேஸ்வரம் மாணவி கொலை: சாட்சியை காக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஷாலினியை ஒரு தலையாக காதலித்த போதை இளைஞர் முனியராஜ் 21, கத்தியால் குத்திக்கொலை செய்தார். ஷாலினியுடன் மற்றொரு பிளஸ் 2 மாணவியும் உடன் சென்றுள்ளார்.அவரை போலீசார் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர்.அந்த மாணவிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


