News March 17, 2025
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்து அறிவிப்பு

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனைகளை தெரிவிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அரசியல் கட்சியினருக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News April 30, 2025
நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
நாகை: சிறுபான்மையினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் மக்கள் (கிறித்துவ. இசுலாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயினர்) ஆகியோருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
நாகை: முக்கிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்

நாகை மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 8825882175 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – 9488546474 , நாகை டி.எஸ்.பி – 9498163851, வேதாரண்யம் டி.எஸ்.பி – 9498163518, மாவட்ட குற்ற பிரிவு – 9994221234, மாவட்ட மதுவிலக்கு அமாலக்கப் பிரிவு – 9787232400. மறக்காமல் உங்கள் நண்பர்கள் மட்டும் உறவினர்களுக்கும் SHARE செய்யவுங்கள்.