News June 27, 2024

தேர்தல் தோல்வி குறித்து பாஜக ஆய்வு கூட்டம்

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேராசிரியர் இராம. சீனிவாசன் போட்டியிட்டார். தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனிடம் தோல்வியுற்றார் இராம சீனிவாசன். எனவே நேற்று(ஜூன் 26) மதுரை பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து உத்தங்குடி ஏ. ஆர். மஹாலில் பாஜக ஆய்வு கூட்டம் கே. பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

Similar News

News August 11, 2025

மதுரை:வீட்ல கரண்ட் இல்லையா.? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம்
94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News August 11, 2025

மதுரையில் டிரெக்கிங் செல்ல BEST PLACE

image

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவியின் தடாகை பாதையில் மீண்டும் மலையேற்றம் துவங்கியுள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வனத்துறை அலுவலர்கள் உதவியோடு மலையேற்றம் நடைபெறும். 6வயதிற்கு மேற்பட்டோர் மலையேற்றம் புரியலாம். விரும்புவோர் தமிழக வனத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த<> இணையத்தில் புக்<<>> பண்ணலாம். இந்த வாரம் டிரக்கிங் செல்ல சரியான இடம் உங்க நண்பருக்கு SHARE பண்ணி கூட்டிட்டு போக சொல்லுங்க

News August 10, 2025

கல்குவாரியில் மூழ்கி சிறுவர் – சிறுமி உயிரிழப்பு..!

image

மதுரை பாண்டியன் கோட்டை கல்மேடு குவாரி பகுதியில் நரிமேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி சையது அலி சஹானா மற்றும் இவரது சித்தப்பா மகனான 3 வயது சிறுவன் ஆஷிக் ராஜா ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!