News March 27, 2024

தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை

image

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹரிஷ் இன்று (27.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் /  ஆஷா அஜித் அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Similar News

News November 9, 2025

சிவகங்கை: காவலர் தேர்வு மைய வரைபடம் வெளியீடு

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (நவ-9) நாளை சிவகங்கை, காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தேர்வு நடைபெறும். 5 மையங்களான அழகப்பா கல்லூரிகள், டாக்டர் உமையாள் ராமநாதன் கல்லூரி, கம்பன் கற்பகம், நியூ மகரிஷி வித்யா மந்திர் ஆகியவற்றில் 4329 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். பழைய/புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News November 8, 2025

சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

சிவகங்கை: வேன் மோதி ஒருவர் பலி

image

மதுரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள மாதவராயன்பட்டி கிராமத்தில் இன்று (நவ-8) காலை தேனியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற டெம்போ டிராவலரும், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டது. இதுக்குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை.

error: Content is protected !!