News April 18, 2024
தேர்தல் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக., அதிமுக., பாமக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்னும் இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Similar News
News November 20, 2024
CRIME TIME(1): யார் இந்த “தார் கேங்”
சேலத்தில் உள்ள தொட்டில்பட்டி அருகே 60 வீடுகள் கொண்ட குடியிருப்பில், கடந்த 7ஆம் தேதி 12 வீடுகளின் கதவுகள் உடைத்து 13 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இது “தார் கேங்கின்” வேலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். யார் இந்த “தார் கேங்” (படிக்க அடுத்த பக்கம் திருப்புங்க)
News November 20, 2024
CRIME TIME(2): யார் இந்த “தார் கேங்”
ம.பி. தார் மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை “தார் கேங்” என்பார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வீட்டின் தாழ்ப்பாளை கட்டிங் பிளேடால் உடைத்து கொள்ளையடிப்பது இவர்களது நேர்த்தி. கொள்ளை அடிப்பதற்கு முன் தங்களது குலதெய்வத்தை வழிபட்டு செல்வார்கள். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நடப்பதற்கு முன் இந்த கேங்கை சுற்றி வளைக்குமாக போலீஸ்?
News November 20, 2024
சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் மாற்றம்
பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக, சேலம் வழியாக செல்லும் சில ரயில்கள் இன்று (நவ.20) மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. பாலக்காடு- சென்னை சென்ட்ரல் ரயில் (22652) சென்னை கடற்கரை வரையிலும், ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22650) பெரம்பூர் வரையிலும், ஆழப்புலா-சென்னை சென்ட்ரல் ரயில் (22640) ஆவடி வரை இயக்கப்படும்.