News March 29, 2024
தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13.12.2025 -சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04343-291983 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
கிருஷ்ணகிரி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

கிருஷ்ணகிரி பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு<
News December 9, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

கிருஷ்ணகிரி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


