News December 6, 2024
தேர்தல் அரசியலை விட்டு விலகிய சபாநாயகர்

டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் நிவாஸ் கோயல் (76) தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வயது காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் வழங்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.
Similar News
News October 19, 2025
படத்திலாவது H ராஜா மாவீரனாக.. திருமாவளவன்

ஒட்டு மீசை வைத்து H ராஜா படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். படத்திலாவது மாவீரனாக தன்னை காட்டிக்கொள்ளலாம் என நினைத்து ராஜா இவ்வாறு செய்வதாகவும் சாடியுள்ளார். கார் மோதல் சம்பவம் நடந்தது வெறும் 20 நொடிகள் தான் என்ற திருமா, இந்த 20 நொடிக்குள் நான் மோதிய நபரை அடிக்க சொன்னதாக தொடர்ந்து பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்: சிவசங்கர்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேட்டியளித்த அவர், தேவையான நேரத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். EB பாக்ஸ் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கினால் தெரியப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News October 19, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார் ❤️❤️

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குழந்தை பிறந்த செய்தியை கணவரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மண வாழ்க்கைக்குள் நுழைந்த இந்த தம்பதி, தற்போது பெற்றோர் என்ற பொறுப்புக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.