News April 22, 2025
தேனீ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் செப்.16,17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
News September 15, 2025
கிருஷ்ணகிரி: சிறுவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
கிருஷ்ணகிரியில் ‘காவு வாங்கும் இடம்’; அச்சத்தில் மக்கள்

ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், சானமாவு வனப்பகுதியில் பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. ‘காவு வாங்கும் இடம்’ எனப் பெயரெடுத்துள்ள இந்தச் சாலையில், உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. விரைந்து பணியை முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.