News April 23, 2025
தேனி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
தேனி : சுற்றுலா செல்ல சிறந்த 10 இடங்கள்

தேனியில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்
▶️ மேகமலை
▶️ சுருளி அருவி
▶️ கும்பகரை அருவி
▶️ வைகை அணை
▶️ வேலப்பர் கோவில்
▶️ வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்
▶️ தென்பழனி முருகன் கோவில்
▶️ பென்னிகுவிக் மணிமண்டபம்
▶️ குரங்கனி
▶️ போடி மெட்டு
இந்த இடங்களுக்கு செல்ல நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .
News April 23, 2025
தேனியில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவியில் காண 1299 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிலை வழிகாட்டு மையம் வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தகவல்
News April 23, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மாமனுக்கு 20 ஆண்டுகள் சிறை

2023ம் ஆண்டு கம்பம் அருகே 45 வயது பெண் தனது 15 வயது மகளுடன் வசித்தார். சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறை கொண்ட ராஜகோபால்(37), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 2வது திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் மகளிர் போலீசார் ராஜகோபாலை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது