News April 24, 2025
தேனி: விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் www.sdat.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7.8.9.11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மே.5 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 11, 2026
தேனி: சிறை வாசலில் கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு..

வருசநாடு பகுதியை சேர்ந்த கணேசன் (23) மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவ்வழக்கில் போடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அடைக்கம்பட்டி சிறைக்கு அழைத்துச் செல்லும்போது உடல்நலக்குறைவு என்று கூறியதால் GH-க்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின் அதிகாலை சிறை வாசலில் 2 போலீசாரை தள்ளிவிட்டு கணேசன் தப்பியோடினார். கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
News April 11, 2026
போடி: மூதாட்டி கொலை; ஜவுளி வியாபாரிக்கு சிறை

போடியை சேர்ந்த ஜவுளி வியாபாரி மணிகண்டன், கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தனிமையில் இருந்தார். பின்னர் மந்திரிப்பதற்காக தந்தை அழகர்சாமியிடம் அழைத்து சென்றார். அப்போது அவரது மனைவி நாச்சியம்மாள் (90) தள்ளி இருந்து மந்திரிக்க சொல்லியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன், நாச்சியம்மாளை கழுத்தில் கடித்ததில் காயமடைந்த அவர் உயிரிழந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
News April 10, 2026
தேனி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இங்கு <


