News April 24, 2025
தேனி: விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் www.sdat.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7.8.9.11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மே.5 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
தேனி: டிகிரி போதும்…ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தேனி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 01.01.2026க்குள் இங்கு<
News December 16, 2025
தேனியில் தோட்ட வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு!

போடி, ஆதிப்பட்டி பகுதியை சோ்ந்தவர் வேலாண்டி. இவா் முத்துக்கோம்பை பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு தோட்டத்துக்கு செல்வதாகக் கூறி சென்ற நிலையில் அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பைக்கு செல்லும் பாதையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.17) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT


