News April 26, 2025
தேனி: வாலிபர் சடலம் மீட்பு

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ஜெயராமன் 64. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பாபு 40. இவர் ஆக்டிங் டிரைவர் வேலை செய்தார். இவருக்கு மது பழக்கம் அதிக அளவில் இருந்துள்ளது.7 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மேலச்சொக்கநாதபுரம் கழிவுநீர் ஓடையில் குடி போதையில் பாபு இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 21, 2025
முல்லைப் பெரியாறு புதிய உதவி செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளுக்காக கம்பத்தில் சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்த குமார் தென்காசிக்கு பணி மாறுதலாகி சென்றார். இதையடுத்து அங்கு உதவி பொறியாளராக பணியாற்றிய ராஜகோபால் பதவி உயர்வு பெற்று பெரியாறு அணையில் உதவி செயற்பொறியாளராக பொறுப்பேற்றார்.
News November 21, 2025
தேனி: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

தேனி மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
தேனி மாவட்ட நிர்வாகத்தின் புதிய ஆதார் அப்டேட்

தேனி: ஆதார் நிறுவனமான uidai சார்பில் ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலியில் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்தால் ஆதாரில் உள்ள விபரங்களை காணலாம். இந்த விவரங்கள் பரிசோதித்து பணியாளரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். இதனை தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


