News January 10, 2025
தேனி : ரூ.14 லட்சம் ஊக்கத்தொகை

தேனி ஆவினுக்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.400 கூட்டுறவு பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் மூலம் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல்செய்யப்படுகின்றன. லிட்டருக்கு 50 பைசா வீதம் பொங்கல் போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அலுவலர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 11, 2025
தேனி: நாய் குறுக்கே புகுந்து இளைஞர் பலி

போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் நேற்று (டிச.10) அப்பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 11, 2025
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

தமிழ்நாடு அரசு 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பணிபுரிந்தவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற https://theni.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
தேனி: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

தேனி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


