News November 3, 2025

தேனி: ரூ.10,000 அபராதம் விதித்த வனத்துறை

image

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 8, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 7, 2025

தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

image

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <>க்ளிக் <<>>செய்து Bank seeding status-ல் ஆதார் எண், மொபைல் ஓடிபி -ஐ பதிவு செய்து பாருங்க. தகவல்களுக்கு: தேனி கோட்டாச்சியரிடம் (0462-2501333) தொடர்பு கொள்ளுங்க. SHARE பண்ணுங்க!

News December 7, 2025

கொடி நாள் நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

அனைத்து பகுதிகளிலும் முப்படை வீரர் கொடி நாள் இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடி நாள் நிதிக்கு தனது நன்கொடையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!