News April 28, 2025

தேனி: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

image

தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <>லிங்க <<>>மூலம் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News January 2, 2026

தேனி: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் உடனே SHARE பண்ணுங்க. தேர்வு செய்யப்படுவோர் மதுரை, நெல்லை அருகே வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

News January 2, 2026

தேனி: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்… சடலம் மீட்பு

image

கூடலுார் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் புல் அறுக்க சென்ற சங்கர் அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக நேற்று முன்தினம் (டிச.31) நடைபெற்ற தேடுதல் பணியில் கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. சங்கர் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

தேனி: சாலை விபத்தில் முதியவர் பலி

image

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுருளி (78). இவர் நேற்று (டிச.31) மாலை திண்டுக்கல்-குமுளி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!