News September 4, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (செப்.,3) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News December 10, 2025

தேனி: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

image

தேனியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News December 10, 2025

தேனி: கார் மோதி கணவன் – மனைவி படுகாயம்

image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவர் இவரது மனைவி ஆர்த்தியுடன் (37) நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் தேனி நோக்கி சென்றுள்ளார். தேவதானப்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு (டிச.9) பதிவு.

News December 10, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE.

error: Content is protected !!