News March 24, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 24.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். இரவு நேரத்தில் வெளியே செல்லும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

Similar News

News October 26, 2025

தேனி: போலீஸ் ஸ்டேஷன் முன்னே கொலை மிரட்டல்

image

தேனி சிவாஜிநகர் ஜெயசுதா 45. இவரது மருமகன் தினேஷ்பாண்டிக்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பான விசாரணைக்கு வந்த ஜெயசுதாவை, மருமகன் தினேஷ்பாண்டி, அவருடன் வந்த திவ்யா, பால்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரில், தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 25, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அக்.29 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும் உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் வழங்கி தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளனர்.

News October 25, 2025

தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்! APPLY

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!