News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
தேனி: மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

தேனி பகுதியை சேர்ந்தவர் சோனைமுத்து (73). தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ 25) அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
தேனி மக்களே உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News November 26, 2025
தேனி: அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருக்கும் இவரது மைத்துனர் ஜெயராமன் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2022.ல் ஜெயராமன், ஜெயபாலனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.25) ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


