News March 25, 2025
தேனி மாவட்டத்தில் புதிதாக 17 மினி பஸ்கள் இயக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13.ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்சித்சிங்கின் ஒப்புதல் பெற்று 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
தேனி:10 வயது சிறுமிக்கு உறவினரால் நேர்ந்த கொடுமை

பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை சிறுமியின் உறவினரான பரமேஸ்வரன் என்பவர் 2024.ல் பாலியல் வன்புணர்வுசெய்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.30) பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
News October 31, 2025
தேனி: கோழி கூண்டில் சிக்கிய வினோத பாம்பு

பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயச்சித்ரா என்பவர் தனது தோட்டத்து வீட்டில் உள்ள கோழிகள் கூண்டில் பாம்பு இருப்பதாக நேற்று (அக்.30) பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கோழி கூண்டில் இருந்த இரு தலை மணியன் பாம்பினை லாவகமாக பிடித்து அதனை தேவதானப்பட்டி வனச்சரகம் வனவரிடம் ஒப்படைத்தனர்.
News October 30, 2025
தேனியில் 13 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

பெரியகுளம் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது எ.புதுப்பட்டி பிரிவு அருகே பையுடன் நின்று கொண்டிருந்த சீத்தாராமன் (61), முத்து (51) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்கள் இருவரும் 13.401 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.


