News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News December 13, 2025
தேனி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
தேனி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்
News December 13, 2025
விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போது 21வது தவணையில் 26,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 22,661 பேர் விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்துள்ளனர். இதில் 3640 பேர் அடையாள அட்டை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாவிட்டால் 22வது தவணை கவுரத்தொகை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அடையாள அட்டை பெற விண்ணபிக்குமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தல்.


