News April 26, 2025
தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு நிலவரம்

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,310 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 590 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,049 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 3,928 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Similar News
News November 22, 2025
தேனி: பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

போடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30) மின் ஊழியரான இவர், நேற்று (நவ.21) இரவு அவரது பைக்கில் தேனி – போடி சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சாலையின் குறுக்கே சென்றதால், திடீரென பிரேக் போட்டதில் விபத்து ஏற்பட்டு ரஞ்சித் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 22, 2025
தேனி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<
News November 22, 2025
தேனி: தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை.!

வருஷநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயபிரகாஷ் கூலி தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.மனைவி நாகஜோதி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வி பட்டு, தனியாருக்கு சொந்தமாக தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


