News March 31, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 31.03.2025 10 மணி- 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 9, 2025
தேனியில் நாளை கனமழை பெய்யும்

நாளை (ஏப்.10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share It.
News April 9, 2025
தேனியில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு , பொறியியல் படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 9, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 09) கத்தரி ரூ.24/20, தக்காளி ரூ.18-15, வெண்டை ரூ.34/30, கொத்தவரை ரூ.20, சுரை ரூ.08-06, புடலை ரூ.28, பாகல் ரூ.35, பீர்க்கை ரூ.35/25, பூசணி ரூ.14-08, மிளகாய் ரூ.30-25, அவரை ரூ.60/50, உருளை ரூ.30, கருணை ரூ.78, சேனை ரூ.55, உள்ளி ரூ.40-35, பல்லாரி ரூ.28, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.22/20, பீன்ஸ் ரூ.65, கோஸ் ரூ.15, கேரட் ரூ.26/20, சவ்சவ் ரூ.24 க்கு விற்கப்படுகிறது.