News April 24, 2025
தேனி : மாணவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, மே.9, 10 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்த விபரத்தை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 04546-251030, கைப்பேசி எண்: 91596 68240-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.
Similar News
News November 2, 2025
தேனி: தலைமறைவான குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News November 2, 2025
தேனியில் நாய் கடியால் 10,000 பேர் பாதிப்பு

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் ஆண்டுக்கு 1,750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10,000 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கால்நடைத்துறை 2022-ன் கணக்கின்படி மாவட்டத்தில் 25,000 தெரு நாய்களும், 15,000 வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தகவல்.
News November 2, 2025
தேனி: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


