News April 13, 2024

தேனி மழைப்பொழிவு விவரம்

image

தேனி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூரில் 6 செ.மீட்டரும், மஞ்சளார், சோத்துப்பாறை, பெரியகுளம் பகுதிகளில் 3 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

Similar News

News November 25, 2025

போடி அருகே பெண்ணை கடத்திய தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

image

போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்துராணி (55). இவரது மகன், தீபா (36) என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா உள்ளிட்ட 7 பேர் இந்துராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, கடத்தி வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். அங்கிருந்து தப்பிய இந்துராணி அளித்த புகாரில் போடி தாலுகா போலீசார் தீபா உள்ளிட்ட 7 பேரை கைது (நவ.24) செய்தனர்.

News November 25, 2025

தேனி: ரூ.10,000 பரிசுத் தொகை அறிவித்த கலெக்டர்

image

தேனியில் 4வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இலச்சினையை (LOGO) கருத்துருவுடன் (THEME) வடிவமைத்து, தங்களது முழு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது thenipro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 5.12.2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.10000 பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

News November 24, 2025

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தேனி கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் (நவ.28) காலை 10:30 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!