News May 17, 2024
தேனி: மழைக்கு வாய்ப்பு!

தேனி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தேனியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
தேனி: முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு; மூவர் கைது!

தேவதானப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (டிச.2) அன்பழகனின் மகன் சத்தியநாதன் அன்பழகனின் பேரன் ஆகியோர் பாண்டியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவதானப்பட்டி போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
News December 3, 2025
தேனி: சண்டையை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.
News December 3, 2025
தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


