News March 29, 2024
தேனி: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News April 22, 2025
சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு

வருஷநாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023ல் திருமணம் முடிந்தது.தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். அவர் அளித்த புகாரில் சிறுமியின கணவர், அவரது தந்தை, தாய், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
தேனி : இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 21.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News April 21, 2025
தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க –