News April 25, 2025

தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

image

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 28, 2025

புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

image

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000‌ பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு 05.12.2025 க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News November 28, 2025

தேனி: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க..!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News November 28, 2025

தேனி: பார்க்கிங் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

image

தேனி, அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (46). இவரது தோட்டத்திற்கு அருகில் பாண்டி (38) என்பவர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ஆட்டோவை தள்ளி நிறுத்துமாறு பாண்டியிடம் இளையராஜா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி இளையராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராக மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரனை

error: Content is protected !!