News April 8, 2025

தேனி : பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்தக் கோயில்

image

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது

Similar News

News September 15, 2025

தேனி: மருமகளை கொலை செய்த மாமனார்

image

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ராஜபிரியா தனியார் பள்ளி ஆசிரியை. கணவன் மனைவி இடையே நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜபிரியா கோவித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.14) மீண்டும் வீடு திரும்பிய அவரை சதீஷின் தந்தை துரைசிங்கம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் விசாரணை.

News September 15, 2025

தேனி: இந்த தேர்வு எழுதினால் அரசு வேலை உறுதி.!

image

தேனி வேலை வாய்ப்பு மையத்தில் செப்.20 அன்று TNPSC குரூப் 2, 2 ஏ தேர்விற்கான இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு விண்ணப்ப நகல், புகைப்படம் சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 63792-68661 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHARE செய்ங்க.

News September 14, 2025

க.விலக்கு: ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம்

image

ஆண்டிபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பாண்டியன் (40) நேற்று முன்தினம் (செப் 12) சிலரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முத்தனம்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். முத்தனம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் பாண்டியன் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் வழக்கு (செப்.13) பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!