News May 15, 2024

தேனி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 8, 2025

தேனி: மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (49). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.7) மாலை அவர் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பாக கோலம் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 8, 2025

தேனி: வைகை அணையில் நீர் நிறுத்தம்

image

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக நவ.,2ல் திறக்கப்பட்ட நீர் நேற்று (நவ.7) நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.

News November 7, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!