News March 21, 2024
தேனி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2024 மக்களவைத் தேர்தல்,தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 எனமூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இத்தொகுதியில் இந்த முறை திமுக-வே நேரடியாக போட்டியிடவுள்ளது.
Similar News
News December 4, 2025
தேனி: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தேனியில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <
News December 4, 2025
தேனி: பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (75). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் சென்ற போது அங்கு தவறி வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.3) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 4, 2025
தேனி: ரூ.85,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


