News May 7, 2025
தேனி : செல்வம் செழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

அட்சயதிருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
தேனி: நவ.8ம் தேதி நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் 08.11.2025 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.
News November 6, 2025
தேனி: தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்கு ரூ.40 என கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தாண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2026 ஜன.31க்குள் செலுத்த வேண்டும் என தேனி தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


