News May 7, 2024
தேனி: கெளமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. பூஜைக்கு பின்னர் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News April 20, 2025
தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி 21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .
News April 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 20) நீர்மட்டம்: வைகை அணை: 56.23 (71) அடி, வரத்து: 41 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 101 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 9.94 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.20 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.
News April 20, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.