News March 28, 2024
தேனி: குளு குளு மலர் கண்காட்சி

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Similar News
News December 10, 2025
தேனியில் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர்புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. கபீர்புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 15.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
கம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

கம்பம் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு நேற்று (டிச.8) தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது 11 பேர் சட்ட விரோதமாக பணம் மற்றும் டோக்கன்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 9, 2025
தேனி: கிணற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

குச்சனூர் அருகே கு.துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குமார் குளிக்கச் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (டிச.8) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


