News March 18, 2025

தேனி : கிராமசபை கூட்டம் முக்கிய அறிவிப்பு 

image

தேனி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்களால்  நடத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள  கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார் .

Similar News

News March 19, 2025

தேனியில் வரும் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

அலைபேசியில் பேசியபடி 3 வது மாடியில் தவறி விழுந்தவர் பலி

image

தேனி, டி.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி 40.முன்னாள் ராணுவ வீரர். மனைவி அருள்மொழி 35. இரு மகள்கள் உள்ளனர். இவர் மாடியில் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம்.இந்நிலையில் மார்ச் 15ம் தேதி இரவு மனைவி அருள்மொழி மாடிக்கு உணவை எடுத்துச் சென்று பார்தத் போது அலைபேசியில் பேசியபடி 25 அடி உயரத்திலிருந்து வெற்றி தவறி கீழே விழுந்தது தெரிந்தது. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரிக்கிறார்.

News March 18, 2025

தேனி : நடப்பாண்டு வரியை செலுத்த  கடைசி தேதி 

image

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் 31 ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார

error: Content is protected !!