News March 17, 2025
தேனி காவலர் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.
Similar News
News March 18, 2025
தேனி : நடப்பாண்டு வரியை செலுத்த கடைசி தேதி

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் 31 ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார
News March 18, 2025
2024.ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் 5 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளன. இந்த சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-இல் 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் அதே சமயம் 2024.ம் ஆண்டு 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
News March 18, 2025
தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.