News May 17, 2024

தேனி: களத்தில் இறங்கிய விவசாயிகள் 

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.

Similar News

News November 3, 2025

தேனி: தாய் இறந்த சோகத்தில் இளைஞர் தற்கொலை

image

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமரன் (16). இவரது தாயார் ஜெயா கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அன்று முதல் குமரன் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற குமரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2025

தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

image

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News November 2, 2025

தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!