News May 16, 2024

தேனி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்திற்கு மே.16 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் மே.17-19 ஆகிய நாட்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் மே.20 அன்று சிவப்பு எச்சரிக்கையும் அறிவித்துள்ளது. அது சமயம் பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 – 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் தகவல்.

Similar News

News November 27, 2025

தேனி: முன் விரதோதத்தால் இளம்பெண் தவறாத சித்தரிப்பு

image

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜான்பாண்டியனுக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞரின் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து ஜான்பாண்டியன் சமூக வலைதளத்தில் பரப்பினார். இது குறித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் ஜான்பாண்டியனை கைது (நவ.26) செய்தனர்.

News November 27, 2025

தேனி: டிகிரி முடித்தால் 35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 Station Master, Ticket Supervisor உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இன்றைக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – 35,400 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இந்த தகவலை SHARE IT.

News November 27, 2025

தேனி: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு.!

image

கூடலூரை சேர்ந்தவர் அபிசதா. இவருக்கு 2.1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் 42 நாட்களுக்கு முன்பு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) 2வது குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு தாய் வேலை செய்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த முதல் குழந்தை 2வது குழந்தையின் மீது தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!